Freitag, 12. November 2010

எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்
மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
சு.வில்வரத்தினம் -கவிஜர் ,பத்திரிகையாளர்
த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
மு.பொன்னம்பலம் -கவிஜர்,எழுத்தாளர்
பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
வீ.டி.இளங்கோவன் -கவிஜர்.எழுத்தாளர்
நக.பத்மநாதன் -எழுத்தாளர்
ஐ.சிவசாமி -கவிஜர் .நாடக எழுத்தாளர்
க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
நக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
யசோத பொன்னம்பலம் -இதழியல்
வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் அரசியல் எழுத்தாளர்
ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
சிவ-சந்திரபாலன் -நாடகம் வானொலி கவிதைஇதழியல் எழுத்தாளர்
துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
கண்ணதாசன் .-எழுத்தாளர்
சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
மைத்தில் அருளையா -கவிதை எழுத்தாளர்
மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
அம்மான் மகேந்திரன் -நாடக எழுத்தாளர்
பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
த-மதி - கவிதை எழுத்தாளர்
எஸ்-சுரேஷ் -கவிதை

ஊடகவியலாளர்கள்

ஊடகவியலாளர்கள்

ஊடகவியலாளர்கள்
தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை
 ராஜேஸ்வரி சண்முகம் -வானொலி அறிவிப்பாளர்

நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி தினகரன்)
துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)

எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
சிவ-சந்திரபாலன்- பத்திரிகை வானொலி தொலகாட்சி விளையாட்டுத்துறை (சுவிஸ்)
சீராளன் -வானொலி (பிரான்ஸ் )
ஆர்.ஆர்.பிரபா -வானொலி (கனடா)
க.அரியரத்தினம் -வானொலி (பிரான்ஸ்)
தி-மோகன் - வானொலி (பிரான்ஸ்)
சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (ஹோல்லந் )

மு.தளையசிங்கம்

மு.தளையசிங்கம்

மு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர்
“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”
மு.த. என்று இலக்கிய உலகம் அடையாளப்படுத்திய மு.தளையசிங்கம் புங்குடுதீவு மக்களுக்கு மிகவும் அந்நியமானவர். பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் அடுத்து உட்காரும் இந்தச் சிந்தனாவாதிக்குரிய இடம் ஈழத்தில் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.
இதனால் மு.த.வைப் பற்றிய அறிமுகம் முதலில் இங்கு அவசியமாகிறது.
மு.தளையசிங்கம் 1935ல் புங்குடுதீவில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். கல்லாப் பெட்டியில் கணக்கைப் பாhத்துக்கொள்ளும் சந்தான மரபிலிருந்து தன்னை மாற்றி இலக்கியத்தின் மூலம் இன்னுமொரு உலகத்திற் புகுந்து கொண்டவர். புவியியலிற் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு ஆசிரியரானார்.
1957ல் எழுதத் தொடங்கினார். இவரது வேகமான சிந்தனைகளிற் பிறந்த விமர்சனங்கள் பல இலக்கிய ஜாம்பவான்களை உலுக்கியது. மேலான வாழ்வுக்கான சமூக பொருளாதார மாற்றங்கள் சத்திய நிலையை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்ற எழுச்சிக் கோஷத்தை முன்வைத்து அவர் எழுதினார். ‘முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழிவகுக்க வேண்டும்’ என்ற அவாரது கூக்குரல் புரிந்தவர்களுக்கு நாராசமாகவும் புரியாதவர்களுக்கு பைத்தியக்காரப் புலம்பலாகவும் கேட்டது.
‘ஏழாண்டுகால இலக்கிய வளர்ச்சி’. ‘புது யுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ என்று பல நூல்களும் பற்பல கட்டுரைகளும் இவரது சத்திய அழைப்பின் வடிவங்கள். இவரது எழுத்துக்கள் சர்ச்சைகளையும் சலசலப்புக்களையும் ஈழத்து இலக்கிய வட்டத்தில் ஏற்படுத்தின. இதுவே இவரைப் பலர் நாடி வந்து ஒட்டிக் கொள்ளவும் பலர் தம்மை இவரிடமிருந்து வெட்டிக் கொள்ளவும் காரணமாயிற்று.
1966ல் மு.த. தனது ஆன்மீக குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியிற் சந்தித்தார். தனது கலைப்பார்வையைப் பிரபஞ்ச யதார்த்தம் என்றiழைக்கும் மு.த.வின் வாழ்க்கை பற்றிய பார்வையில் பல மாற்றங்கள் இக்காலகட்டத்தில் ஏற்பட்டன. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கு தனது ஆன்மீகத் தளத்தை மேலும் விரிவு படுத்தினார்.
1968 ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து தனது சமூகப் பணிகளைப் பரவலாக்கும் கருவியாக அரசியலைப் பிரயோகிக்கும் நோக்கத்தில் குறுகிய கால அரசியற் பிரவேசம் செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காய் கடுமையாக உழைத்தார். 1971ல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு இவர் நடாத்திய போராட்டத்தின்போது காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் நோய்வாயப்பட்டு 1973ம் ஆண்டு சித்திரை மாதம் 2ம் திகதி தன் உலகப் பணியை முடித்துக்கொண்டு பிரபஞ்ச மடியில் நித்திய தூக்கத்தில் ஆழ்வதே யதார்த்தம் என்று சென்றுவிட்டார்.
மு.த. வைப் புரிய வைக்க இக்கட்டுரை முயற்சித்தால் அதில் வெற்றி பெறாது. அவரது சிந்தனைத் தளத்தை என்னால் அணுகவே முடியாது என்பதை முதலில் ஒத்துக் கொள்கிறேன். மு.த. புங்குடுதீவைச் N;சர்ந்தவரானாலும் அவர் உலகத்தின் சொந்தக்காரார். அப்படியொரு உலகத்தரமான சிந்தனாவாதி ஒருவரைப் பெற்றிருந்தும் அனுபவிக்காமற் போய்விட்டது புங்குடுதீவ மக்கள் செய்த துர்ப்பாக்கியம்.
1966 தொடக்கம் 1973ல் அவர் மரணமாகும்வரை அவர் புங்குடுதீவில் வாழ்ந்த காலம் அவ்வூர் மக்களின் பொற்காலம் என உறுதியோடு சொல்லலாம்.
அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஆசிரியராகவோ, இலக்கியவாதியாகவோ, சமூகவாதியாகவோ அல்லது குறுங்கால அரசியல்வாதியாகவோ அல்லது சிலர் கண்களில் ‘ஒரு பனியனாகவோ’ பார்க்கப்பட்டிருக்கலாம்.
அப் பார்வைகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. உலகச் சிந்தனாவாதிகளுக்கு அவர் கொடுத்த தரிசனம் வேறு. அவர் உலாவந்த பல்வேறு மனத்தளங்களை அறியும்போதுதான் அவரின் கருத்துலகம் பற்றி முழுதாக அறிந்துகொள்ளும் பாக்கியத்தை நாம் பெறுவோம்.
‘மு.தளையசிங்கம் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சினைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர்.
பிரச்சினைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் சென்றவர். பிரச்சினைகள், அவற்றைப் புரி;ந்துகொள்வதற்கான தயாரிப்பு, விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள், உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களைக் கூறல்.
இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.’ என்று மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் குறிப்பிடுவார்.
இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மனிதர் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தார் என்பதை உலகம் சுட்டி நாம் பார்க்கவேண்டிய கடப்பாடு.
ஈழத்துக் கலை இலக்கியம் பொதுவுடமைவாதிகளின் தத்துவப்பிடியில் அகப்பட்டிருக்கும் காலத்திலேயே சத்திய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு பிரவேசிக்கிறார் மு.த. பல்வேறு பிரச்சினைகளால் சஞ்சலப்படும் மனிதனின் உடனடித் தீர்வாக பொழுது போக்கு இலக்கியம் என்ற போர்வையில் கலையையும் இலக்கியத்தையும் அவர்கள் பயன்படுத்துவதைச் சாடுகிறார். மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் முக்கிய மருந்துகளில் ஒன்றாகவே கலை இலக்கியத்தை அவர் பார்த்தார்.
இங்குதான் மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனம் ஆரம்பமாகிறது. பல முற்போக்கு, நற்போக்கு, தேசீய இலக்கியக் காப்பாளர்கள் என்று பலர் இவ்வீச்சில் அடிபட்டு வீழ்ந்தார்கள். ‘கலை கட்சிக்காக’ என்று கலையைச் சித்தாந்த அறிவு வழியில் மட்டும் காட்டி இலக்கியத்தை வெறும் இயந்திர முயற்சியாக நிறுத்தி வைத்திருந்த பலரால் மு.த. வை எதிர்கொள்ள முடியாமற் போனது. தம்மால் முடியாதபோது மு.த. வின் சுழல் வீச்சு விமர்சனப் பயணத்திற்கு அடிக்கடி கட்டை போட்டுக் கொண்டார்கள்.
இவை எவற்றினாலுமே அவரது பயணத்தை தடுக்கவோ நிறுத்தவோ இயலாமற் போனது. ‘இன்றய மனிதனின் பரிணாம நிலையில் பூரணமின்மையே அவனது நோய் என்றும் அதற்கான தீர்வைத் தரவல்லது சர்வோதயப் பொதுவுடமையே’ என்று கர்ச்சித்த மு.த. வின் மெய்முதல்வாதக் கோட்பாடு வீதியுலா வந்தது.
புpராய்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஹேகல் மட்டுல்லாது இந்திய பண்பாட்டின் ஆழத்தையும் அறிந்து வைத்திருந்தவர் மு.த. கலை இலக்கியம், விஞ்ஞானம், சமய ஞானம் என்று பல களங்களிலும் அவர் இலகுவாகப் பொருந்தக்கூடியவர். மஹாத்மா காந்தி, வினோபாபாவே, அரவிந்தர் ரமணர் போன்றவர்களின் சத்திய மரபை அவர் வரித்துக் கொண்டது வெறும் விபத்தல்ல.
“எப்போது மனிதன் உண்மையின்- சத்தியத்தின் – அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் உண்மையான கலையும் உதயமாகிறது.
வாழ்க்கையே எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூரணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லைகளும், அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக?’
- என்ற மஹாத்மா காந்தியின் வாசகங்களே மு.த. வின் வாழ்வை வளப்படுத்தியவை.
தான் நம்பிய, வரித்துக்கொண்ட தத்துவத்தைத் தன் வாழ்விலே பரீட்சித்துப் பார்த்த பின்னரே அதைச் சமூகத்தில் பிரயோகித்தவர் மு.த. இதனால் மரபு சார்ந்த இலக்கிய நடைமுறைகளை அவர் பல தடவைகளில் கட்டுடைத்தார். ‘மெய்யுள்’ என்ற அவரது படைப்பு இத்தகையது. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் உருவம் அது. “இதுகாலவரையுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. கற்பனைக் கோலங்கள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை இலக்கிய வடிவமே ‘மெய்யுள்’”என அவர் தனது முன்னுரையில் கூறுகிறார். “பூரணமின்மையே இன்றய மனிதனது நோய்.
இலக்கியம் பூரணமடையும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. அதன் பொருட்டு சகல தொழில்களுமே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றப்பட வேண்டும். இதற்காக இன்றய ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்” என்று அவர் வாதிடுகிறார்.
மு.த. புங்குடுதீவுக்கு மாற்றலாகியது அவரது சுய பூரணத்துவத்தின் இறுதிக்கட்டமாகவே என்றும் சமூக மாற்றத்துக்கான அவரது முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பதற்கான பணிப்பின் வடிவமே இந்த இடமாற்றம் என்றும் இப்போது நம்பவேண்டியிருக்கிறது. இக்கால கட்டத்தில் அவர் பல இளைஞர்களைத் தன் வசம் ஈர்த்தார். பிரச்சினைகளுக்கு வன்முறையே தீர்வு என்று போர்க் கோலம் பூண்டிருந்த இளைஞர்கள் பலர் இவரது சாத்வீகக் கட்டுக்குள் அகப்பட்டது ஆச்சரியமாகவிருந்தது.
ஆன்மீகத்தின் மூலம் பொருளை நாடும் கருத்து முதல்வாத ஆசார மரபை நிராகரித்த அதே வேளை பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடிய பொருள் முதல்வாதத்தையும் நிராகரித்ததன் மூலம் இவ்விரண்டிற்குமே பொதுவான அடித்தளமாகவிருந்த சத்தியத்தைத் தனது முதல்வாதமாகப் பிரகடனம் செய்தார். கருத்து, பொருள் முதல்வாதங்களால் அதிருப்தியடைந்திருந்த பல இளைஞர்கள் இவரிடம் புகலிடம் கண்டனர். சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்து பல ஆத்மீகப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து வந்தார்.
இவரது சர்வோதய இயக்கம் ஆரியரத்தினாவின் பராமரிப்பிலிருந்த- சமூகப் பணிகளில் மட்டுமே குவிவு பெற்ற – இயக்கமல்ல. மாறாக, வினோபாபாவே யின் ஆன்மீக மரபினைத் தழுவிய சாத்வீக குணவியல்புகளை முதன்மைப்படுத்தும் சர்வோதய இயக்கமாகவே இருந்தது. இதனாலேயே அவர் ஆத்மீகப் பயிற்சிகளை முன்னின்று நடாத்தினார். இவரிடம் கல்வி கற்ற மாணாக்கர்கள் மட்டுமல்லாது இதர பணிகளை மேற்கொண்ட பல இளைஞர்களும் இணைந்து ஒரு ஆன்மீகப் பேரலையாக உருவெடுத்தது.
தனது சத்திய சேனையின் விரிவு படுத்தலின் ஆயுதமாக அவர் கலை இலக்கியத்தைப் பாவித்தார். ‘அதிருப்தியாளனே போராட வருவான், அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சிக்குரிய அலைகள் அவர்களிடமே உண்டு’ என்று மு.த. நம்பினார். சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், ‘பூரணி’ மகாலிங்கம் போன்ற பலர் அவரது வேட்கையைத் தணித்தனர். 1970ல் ‘சத்தியம்’ என்ற பத்திரிகை இவரால் ஆரம்பிக்கப்பட்டது.
சர்வோதயக் கோட்பாட்டின் பிரயோகப்படுத்தலின் அடுத்த கட்டமாக புங்குடுதீவையே மீண்டும் ஒரு தடவை களமாக்கிக் கொள்கிறார் மு.த. 1971ம் ஆண்டு கண்ணகையம்மன் கோவில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் அள்ளுவதற்கு வழி செய்து கொடுக்கும்படி சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்.
புங்குடுதீவு மக்கள் சிலரின் அகோரமான முகங்களை இப் போராட்டம் உலகுக்குக் காட்டியது. காவற்துறையினராற் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டார். இதே போன்று காளி கோவிற் பிரகாரத்தில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ‘உண்டியல் திருடியதற்காக’ மு.த. கைது செய்யப்பட்டார். இதற்குப் பொய்ச் சாட்சி சொன்னவர் எமதூரின் இன்னுமொரு பிரபல ‘சமூகத் தொண்டன்’ என்பது வெட்கத்துக்குரிய விடயம்.
தனது மெய்முதல்வாதக் கோட்பாட்டைப் பிரயோகித்த முதல் தளமாக அவர் புங்குடுதீவை எடுத்துக் கொண்டார்.
புங்குடுதீவு மக்களின் மாபெரும் பண்புகளில் ஒன்று அவர்களது கலை இலக்கியங்களின் மீதான அதீத பற்று. வாழ்க்கையே கலை, வாழ்க்கையே பேர் இலக்கியம் என்ற வகையில் அதை ஆற்றுப்படுத்தலின் தேவையாக மெய்முதல்வாதத்தைப் பிரயோகிக்க மிகவும் பண்பட்ட தளமாக புங்குடுதீவை அவர் தேர்ந்ததில் வியப்பிருக்க முடியாது.
புங்குடுதீவு மக்களின் அரசியல் பாரம்பரியம் பொதுவாக தமிழரசுக் கட்சியின் நிழலாகவே இருந்து வந்தது. மு.த. தன் இளமைக் காலங்களில் தமிழரின் விடுதலைக்காக வன்முறையே ஒரே வழி என்கின்ற போக்கினையே கடைப்பிடித்து வந்தார். இரத்தினபுரி வாழ்க்கையும், அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பல்வித குணவியல்புகளுடைய மாணவர்களின் பாதிப்பும் அவரது சிந்தனைத் தளங்களை மாற்றியமைத்தன. கலை இலக்கியப் பேர்வழிகள் சிலரின் போலித்தனம், அரசியல்வாதிகளின் கபடங்கள் எல்லாமே அவரது உருவாக்கத்தில் பெரும் பங்கு பெறுவன.
இருப்பினும் கலை இலக்கியத்தையோ அல்லது அரசியலையோ அவர் நிராகரித்துவிட்டு துறவியாகிவிட முயற்சிக்கவில்லை. மனித மேம்பாட்டிற்கு சிந்தனைத் தெளிவும் பூரணத்துவம் பெறுவதுமே ஒரே வழி என்று அவர் உண்மையிலேயே நம்பினார். கலை இலக்கியக் காரனோ, அரசியல்வாதியோ அல்லது எந்தவொரு சாதாரண மனிதனோ பூரணமின்மை என்ற தனது நோயை உணரும்போது தனது போராட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் இயங்கினார். தனது சத்திய இயக்கத்தின் மூலம் எதையும், எவரையும் பூரணமாக்க முடியும் என்பதில் அவர் அசைக்க முடியதம நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அவரது முகாமிற்கு யார் வருகிறார் யார் போகிறார் என்பதில் அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை.
அவர் குறுகிய கால அரசியல் பிரவேசமும் இப்படியான ஒரு சத்திய பரிசோதனையே. தனது சர்வோதய இயக்கத்தின் சார்பில் புங்குடுதீவின் முன்னாள் சட்டத்தரணியாகிய ப.கதிரவேலு அவர்களைத் தேர்தல் வேட்பாளராக ஆதரித்தார். இதற்காக மு.த. வின் சீடர்கள் பலர் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆனாலும் தனது பரீட்சையில் வெற்றி கிடைக்கும். என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனாலும் அவரது பரிசோதனையில் அவருக்குக் கிடைத்த வெற்றிகளைவிடவும் கிடைத்த எதிரிகளே அதிகம்.
அவரது இறுதிக்காலத்தை அவசரப்படுத்தியதும் இப்படியான நிகழ்வுகள்தானோ என்ற ஐயம் எனக்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவரது சத்திய பரிசோதனையில் முடிதேடிப் போகாது அடிதேடிப் போனதால்தான் அவர் விஷ்ணுவாக முடிந்தது என்பது மட்டும் திருப்தி.
‘கருத்துகள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும், அவற்றில் காணும் உண்மைக்காக அல்ல. எது சௌகரியமானது, எது தனக்குப் பாதுகாப்பானது என்பதைப் பொறுத்தே கருத்துக்கள் ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் நிகழ்கின்றன. இதன் காரணமாகவே நிறுவனம் சார்ந்தவை, கட்சி சார்ந்தவை, சாதி சார்ந்தவை, இரைச்சல் பலம் சார்ந்தவை, சலுகைகள் சார்ந்தவை ஏற்கப்படுகின்றன. தனிமனிதனின் குரல் எடுபடுவதில்லை’ என்று விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் அவர்கள் சொல்வார்கள்.
மு.தளையசிங்கம் ஒரு சத்திய காவலர். அவர் தனது சடவுடலை விட்டு சூக்கும உடலில் ‘அது’ வோடு ஆத்ம வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். தொப்புள் கொடி இன்னும் அறுக்கப்படவில்லை.

Donnerstag, 11. November 2010

நாவேந்தன்


Navethan01
நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.
நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் நடையைக் கொண்டிருந்தார்.
மது பதினைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.
தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் சுதந்திரனிலேயே அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய “மரியாள் மகதலேனா” என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.
சமுதாய அவலங்களை சாதாரண மக்களின் பிரச்சினைகளை மூடத்தனங்களை தீண்டாமையைக் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தார். இவர் அநேக கட்டுரை நூல்களையும் நாடகங்களையும் எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். இலங்கை தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் எழுதி வெளியிட்ட “சிறீ அளித்த சிறை” என்னும் நூல் அரசியல் தலைவர்கள் பலரதும் பாராட்டுக்குள்ளானது.

யாழ். இலக்கிய வட்டம் நாவேந்தன் நினைவாக ஆண்டு தோறும் ஈழத்தில் வெளியாகும் சிறுகதைத் தொகுதிகளுக்குள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் சிறுகதைத் தொகுதிக்கு நாவேந்தன் விருதினை வழங்கிவருகிறது.
வெளிவந்த நூல்கள்
சிறுகதைத் தொகுதிகள்
வாழ்வு
தெய்வ மகன்
வாழ்வு சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் (1964) பெற்றது.
குறுங்காவியம்
மரியாள் மகதலேனா
கட்டுரை நூல்கள்
மானவீரன் கும்பகர்ணன்
சிலப்பதிகாரச் செந்நெறி
நான் ஒரு பிச்சைக்காரன்
தலைவர் வன்னியசிங்கம்
ஜோண் கஸ்டர்
நாடகங்கள்
பெருநெருப்பு
மண்டோதரி
தாரை
அரசியல் நூல்
சிறீ அளித்த சிறைநாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் நடையைக் கொண்டிருந்தார்.

[தொகு] எழுத்துத் துறையில்

தமது பதினைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.
தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் சுதந்திரனிலேயே அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய "மரியாள் மகதலேனா" என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.
சமுதாய அவலங்களை சாதாரண மக்களின் பிரச்சினைகளை மூடத்தனங்களை தீண்டாமையைக் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தார். இவர் அநேக கட்டுரை நூல்களையும் நாடகங்களையும் எழுதியுள்ளார்.

[தொகு] அரசியல் பணி

யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். இலங்கை தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் எழுதி வெளியிட்ட "சிறீ அளித்த சிறை" என்னும் நூல் அரசியல் தலைவர்கள் பலரதும் பாராட்டுக்குள்ளானது.

[தொகு] நினைவு விருது

யாழ். இலக்கிய வட்டம் நாவேந்தன் நினைவாக ஆண்டு தோறும் ஈழத்தில் வெளியாகும் சிறுகதைத் தொகுதிகளுக்குள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் சிறுகதைத் தொகுதிக்கு நாவேந்தன் விருதினை வழங்கிவருகிறது.

[தொகு] வெளிவந்த நூல்கள்

[தொகு] சிறுகதைத் தொகுதிகள்

  • வாழ்வு
  • தெய்வ மகன்
வாழ்வு சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் (1964) பெற்றது.

[தொகு] குறுங்காவியம்

  • மரியாள் மகதலேனா

[தொகு] கட்டுரை நூல்கள்

  • மானவீரன் கும்பகர்ணன்
  • சிலப்பதிகாரச் செந்நெறி
  • நான் ஒரு பிச்சைக்காரன்
  • தலைவர் வன்னியசிங்கம்
  • ஜோண் கஸ்டர்

[தொகு] நாடகங்கள்

  • பெருநெருப்பு
  • மண்டோதரி
  • தாரை

[தொகு] வேறு

  • சிறீ அளித்த சிறை

சு. வில்வரத்தினம்

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு. தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார்.
இவரது காற்றுவழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது. இவர் கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட.
வில்வரத்தினம் இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள கல்வித்திணைக்களத்தில் பணியாற்றினார். 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வில்வரத்தினம் அவர்கள் கொழும்பில் டிசம்பர் 9, 2006 அன்று தனது 56வது வயதில் காலமானார்.

[தொகு] நாட்டுப்பற்றாளர் விருது

தமிழீழ விடுலைப் போராட்டத்திற்கு பங்களிப்பை செய்த படைப்பாளர், கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களுக்கு தமிழீழ விடுலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்

[தொகு] வெளிவந்த நூல்கள்

  • அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
  • காற்றுவெளிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
  • காலத்துயர் (கவிதைத் தொகுதி)
  • நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
  • உயிர்த்தெழும் காலத்துக்காக (கவிதைத் தொகுதி, 2001)
  • வாசிகம் (2006)

[தொகு] குரல்


[தொகு] நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்

[தொகு] வெளி இணைப்புக்கள்

மு. பொன்னம்பலம்

மு. பொன்னம்பலம் (1939, புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்து வருகிறார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] இவரது நூல்கள்

  • அது (1968)
  • அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
  • விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
  • பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
  • யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
  • கடலும் கரையும் (1996)
  • காலி லீலை (1997)
  • நோயில் இருத்தல் (1999)
  • திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
  • ஊஞ்சல் ஆடுவோம் (2001)
  • பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
  • சூத்திரர் வருகை
  • விசாரம்

தா. பாலகணேசன்

தா. பாலகணேசன் (பிறப்பு ஆகஸ்ட் 24, 1963பிரான்சில் (புங்குடுதீவு)வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். கவிதை மற்றும் அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நின்று விடாது நடிப்பதிலும் ஏனைய அரங்கியற் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர்.

[தொகு] இவரது நூல்கள்

  • வர்ணங்கள் கரைந்த வெளி (2004)

தம்பிஐயா தேவதாஸ்

 தம்பிஐயா தேவதாஸ்
வாழ்க்கைக் குறிப்பு

புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில்(24.04.1951 ) தம்பிஐயா - ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வராகப் பிறந்த இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இப்பொழுது கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராகவும், இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில் நேர்காண்பவராகவும், கொழும்பு பல்கலைக்கழக பத்திரிகைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்.

ஆரம்பத்தில் சிங்கள நாவல்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பட்டதாரி ஆசிரியரான இவர் பாட நூல்களையும் எழுதியுள்ளார்.
[தொகு] இவருடைய ஆக்கங்கள்
[தொகு] மொழிபெயர்ப்பு நாவல்கள்

* நெஞ்சில் ஓர் இரகசியம் (1975)
* இறைவன் வருத்த வழி (1976)
* மூன்று பாத்திரங்கள் (1977)

[தொகு] சினிமா தொடர்பான நூல்கள்

* இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (1994,2000)
* பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா (1999)
* இலங்கைத் திரையுலக முன்னோடிகள் (2001)

[தொகு] பிற நூல்கள்

* தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும் (1998)
* சிங்களப் பழமொழிகள் (2005)
* புங்குடுதீவு வாழ்வும் வளமும் (2006)

Donnerstag, 14. Oktober 2010

ஊடகவியலாளர்கள்

ஊடகவியலாளர்கள்
தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை
க.செல்வரத்தினம் -இலங்கை வானொலி நாடகம் பேச்சு ராஜேஸ்வரி சண்முகம் -வானொலி அறிவிப்பாளர்
இரா.கந்தசாமி -வானொலி -கனடா
நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி தினகரன்)
துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)
ந.தர்மபாலன் -பத்திரிகை (கனடா)
எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
சிவ-சந்திரபாலன்- பத்திரிகை வானொலி தொலகாட்சி விளையாட்டுத்துறை (சுவிஸ்)
சீராளன் -வானொலி (பிரான்ஸ் )
ஆர்.ஆர்.பிரபா -வானொலி (கனடா)
க.அரியரத்தினம் -வானொலி (பிரான்ஸ்)
தி-மோகன் - வானொலி (பிரான்ஸ்)
சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (ஹோல்லந் )
செ.சுரேஷ் -வானொலி தொ

எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்
மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
சு.வில்வரத்தினம் -கவிஜர் ,பத்திரிகையாளர்
த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
மு.பொன்னம்பலம் -கவிஜர்,எழுத்தாளர்
பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்
சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
வீ.வ.நல்லதம்பி இலக்கியம்
எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
வீ.டி.இளங்கோவன் -கவிஜர்.எழுத்தாளர்
நக.பத்மநாதன் -எழுத்தாளர்
ஐ.சிவசாமி -கவிஜர் .நாடக எழுத்தாளர்
க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
நக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
யசோத பொன்னம்பலம் -இதழியல்
வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் அரசியல் எழுத்தாளர்
ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
சிவ-சந்திரபாலன் -நாடகம் வானொலி கவிதைஇதழியல் எழுத்தாளர்
துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
கண்ணதாசன் .-எழுத்தாளர்
சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
மைத்தில் அருளையா -கவிதை எழுத்தாளர்
மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
அம்மான் மகேந்திரன் -நாடக எழுத்தாளர்
பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
த-மதி - கவிதை எழுத்தாளர்
எஸ்-சுரேஷ் -கவிதை